மீண்டும் தள்ளிப்போகும் 'LIK' பட ரிலீஸ்.. ஒருவாரம் முன்பே வெளியாகும் 'காளிதாஸ் 2’

நடிகை சங்கீதா இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார்.
மீண்டும் தள்ளிப்போகும் 'LIK' பட ரிலீஸ்.. ஒருவாரம் முன்பே வெளியாகும் 'காளிதாஸ் 2’
Published on: 

2019-ம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற 'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குனரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'காளிதாஸ் 2' திரைப்படம்.

இப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி.எம். கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து ‘காளிதாஸ் 2’ படம் அடுத்த மாதம் 10-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ‘காளிதாஸ் 2’ படம் அடுத்த மாதம் 3-ந்தேதி அதாவது ஒருவாரத்திற்கு முன்பாகவே வெளியிடப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது, ஏப்ரல் 3ஆம் தேதி இப்படம் வெளியாகாது என்பது தெரியவந்துள்ளதால் ‘காளிதாஸ் 2’ படம் முன்கூட்டியே வெளியாகிறது

X

Maalai Malar
www.maalaimalar.com