Kaalidas 2 | நான் செய்த தவறுகள் தான் காரணம்... மனம்திறந்து பேசிய நடிகர் பரத்!

காளிதாஸ் 2 படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
Kaalidas 2 | நான் செய்த தவறுகள் தான் காரணம்... மனம்திறந்து பேசிய நடிகர் பரத்!
Published on: 

2019-ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற 'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'காளிதாஸ் 2' திரைப்படம். இந்தப் படத்தில் பரத், அஜய் கார்த்திக், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி, டி.எம். கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா- இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் 03-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பட வெளியீட்டை ஒட்டி நடிகர் பரத் அளித்த சமீ்பத்திய பேட்டியில் தன் திரையுலக பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது அவர், "எதுவுமே செய்யாதவங்க கூட எங்கேயோ உயர்ந்து போயிட்டாங்கனு, ஒருசிலர் என்னிடம் சொல்வதுண்டு. அப்படி சொல்லும் போது எனக்கு அது மனவேதனையை கொடுக்கும். ஆனால், அது அவர்களின் தலைவிதி மற்றும் அதிர்ஷ்டம். ரசிகர்கள் என் படங்களை பார்க்காமல் போனதற்கு நான் கதைகளை தேர்வு செய்த விதத்தில் செய்த தவறுகளே காரணம்.

நான் இப்போதும் இந்த போட்டியில் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஒருநாள் சஞ்சு சாம்சனை போல் நானும் ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்னும் உயர்ந்த நிலையை அடைவேன். என் திரையுலக மறுபிரவேசத்திற்காக ரசிகர்கள் இப்போதும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்," என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com