பேட்டில் – திரை விமர்சனம்

பேட்டில் – திரை விமர்சனம்

யுவராஜ். ஆர் ஒளிப்பதிவு இயல்பான லொக்கேஷன்களில் எடுக்கப்பட்டதால் நம்பகத்தன்மை இருக்கிறது.
Published on
பேட்டில் – விமர்சனம்(2 / 5)

ராப் பாடகராக உயர வேண்டும் என்ற கனவுடன் வாழும் நாயகன் அர்ஜுன் பிரபாகரன், தனியார் பள்ளி ஆசிரியையான நாயகி ஆராத்யாவை காதலிக்கிறார். தனது முயற்சியால் பெரிய ராப் பாடகராக உயர்ந்த அவர், ஒரு கட்டத்தில் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிக்கும் செல்லும் வாய்ப்பு பெறுகிறார்.

இதற்கிடையில், ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் நடக்கும் மோசடிகள் வெளிச்சத்துக்கு வருகிறது. அந்த பிரச்சனையால் மாணவர்கள் பாதிக்கப்படுவதோடு, ஒரு மாணவி தற்கொலை செய்வதும் நிலைமைக்கு தீவிரம் சேர்க்கிறது. இந்த உண்மையை ராப் பாடலின் மூலம் வெளிக்கொணர வேண்டும் என்று முடிவு செய்யும் ஆராத்யாவுக்கு, அர்ஜுன் துணை நிற்கிறார்.

ஆனால், இதனால் தனது வளர்ச்சி பாதிக்கப்படும் என்று நினைக்கும், இசை நிறுவனம் தடையாக நிற்கிறது. அதே நேரத்தில், பள்ளி நிர்வாகமும் அவர்களை மிரட்டுகிறது. இறுதியில் இந்த பிரச்சனைகளை சமாளித்து, அர்ஜுன், ஆராத்யா நினைத்ததை சாதித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

நாயகனாக நடித்துள்ள அர்ஜுன் பிரபாகரன், கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தாலும், நடிப்பில் முழுமையாக நம்ப வைக்கவில்லை. குறிப்பாக ராப் பாடல் காட்சிகளில் எனர்ஜி குறைவாக தெரிகிறது. நாயகியாக நடித்து இருக்கும் ஆராத்யா, இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

வில்லனாக வரும் சுப்பிரமணிய சிவா தனது அனுபவத்தால் கதாபாத்திரத்தை நன்றாக எடுத்துச் செல்கிறார். சரவண சுப்பையா, முனிஷ்காந்த், சுருளி, காயத்ரி உள்ளிட்ட அனைத்து மற்ற நடிகர்களும் தங்களுக்கான பங்கை செய்துள்ளனர்.

இயக்கம்

இயக்குனர் நாராயணன்.பி.ஏ, கல்வி துறையில் நடக்கும் மோசடிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நேரடியாக பேச முயற்சி செய்துள்ளார். கலை மற்றும் இசையின் மூலம் சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளார். ஆனால், இந்த கருத்துகளை சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றுவதில் குறைபாடு தெரிகிறது.

ஒளிப்பதிவு

யுவராஜ்.ஆர் ஒளிப்பதிவு இயல்பான லொக்கேஷன்களில் எடுக்கப்பட்டதால் நம்பகத்தன்மை இருக்கிறது.

இசை

ஜீவாவின் இசை முக்கியமான கதையாக இருந்தும், பாடல்கள் மற்றும் ராப் பகுதிகள் நினைவில் நிற்கும் அளவிற்கு இல்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com