`இதயம் முரளி' படப்பிடிப்பில் முகத்தில் கேக் பூசி பிறந்தநாள் கொண்டாடிய அதர்வா

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், திரைப்படம் "இதயம் முரளி" "இதயம் முரளி" படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
`இதயம் முரளி' படப்பிடிப்பில் முகத்தில் கேக் பூசி பிறந்தநாள் கொண்டாடிய அதர்வா
Published on

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும்,"இதயம் முரளி" படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.

முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் "இதயம் முரளி" படத்தைத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது. "இதயம் முரளி" படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அதர்வா பிறந்தநாளை இதயம் முரளி படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.அதன் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அதர்வாவின் முகத்தில் அனைவரும் கேக் பூசி மகிழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com