STR 51 பற்றி சுவாரசிய அப்டேட் கொடுத்த அஷ்வத்

சிம்புவின் 51-வது படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.இப்படத்தை டிராகன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார்.
STR 51  பற்றி சுவாரசிய அப்டேட் கொடுத்த அஷ்வத்
Published on

சிம்புவின் 51-வது படத்தின்  அறிவிப்பு போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இவர் இப்படத்தில் காட் ஆஃப் லவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிராகன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் டிராகன். இத்திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டடித்துள்ளது.

டிராகன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து இந்தி மொழியிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் STR 51 படத்தை பற்றிய சில தகவல்களை கூறியுள்ளார் " படப்பிடிப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கும். திரைப்படம் கண்டிப்பாக அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும். டிராகன் பட வெற்றியை கொண்டாடிவிட்டு அந்த படத்தின் வேலைகளை தொடங்கவுள்ளேன்" என கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com