குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக “கான் சிட்டி” இருக்கும் - அர்ஜூன் தாஸ்

சுவாரஸ்யமான தகவல்களையும், தனது திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக  “கான் சிட்டி” இருக்கும் - அர்ஜூன் தாஸ்
Published on

நடிகர் அர்ஜுன் தாஸ் தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளார். ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி, அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கான் சிட்டி திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும், தனது திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

பத்திரிக்கையாளர்கள் கருத்து:

அப்போது பேசிய அவர், “நான் நடித்த ஒவ்வொரு படமும் முடிந்த பிறகும் பத்திரிக்கையாளர்கள் பலர் தனிப்பட்ட முறையில் வந்து தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.

அந்த கருத்துக்கள் எனது அடுத்தடுத்த படத் தேர்வுகளிலும், நடிப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. என்ன மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும், எந்த மாதிரியான நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உங்கள் கருத்துகள் மூலமாகவே புரிந்துகொண்டேன்.

மகிழ்ச்சியான படம்:

கான் சிட்டி குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான, மகிழ்ச்சியான திரைப்படம். கதையைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கை, அதில் நடைபெறும் உணர்வுபூர்வமான தருணங்கள், நகைச்சுவை மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்,” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com