சிம்பு ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் ரெடி

இந்த படத்தில், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், பிரியங்கா மோகன், யோகி பாபு, ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
சிம்பு ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் ரெடி
Published on: 

நடிகர் சிலம்பரசன் ‘தக் லைப்’ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், பிரியங்கா மோகன், யோகி பாபு, ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இப்படத்தின் இரவு நேரப் படப்பிடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது, ​​பிரியங்கா மோகன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இத்திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்த வருட தீபாவளி பண்டிகை சிம்பு ரசிகர்களுக்கு சரவெடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com