ஃபாஸ்ட் மோடில் ‘அரசன்’... முக்கிய காட்சிகளின் ஷூட்டிங் ஓவர்

‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, அமீர், கிஷோர், விக்ராந்த், யோகலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
அரசன் படப்பிடிப்பில் நடிகர் சிம்பு மற்றும் படக்குழுவினர்.
Published on

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அரசன்’ படம் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ‘அரசன்’ படத்தின் முக்கி காட்சிகள் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளர். இதுதொடர்பாக நடிகர் சிம்பு எக்ஸ் தள பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்து பதிவிட்டுள்ளதாவது, ‘அரசன்’ படத்தின் முக்கியமான படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்தது. இப்போது சற்று ஓய்வெடுத்து, புத்துணர்ச்சி பெற்று, அடுத்தகட்டத்திற்குத் தயாராகும் நேரம் என்று பதிவிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து இரவு நேர படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா ஜெரமியா, அமீர், கிஷோர், விக்ராந்த், யோகலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com