Arasan| 2-ம் கட்ட அரசன் படப்பிடிப்பு

வடசென்னையை மையமாக கொண்டு படம் உருவாகி வருவதால் வடசென்னை போல் அரங்குகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
Arasan| 2-ம் கட்ட அரசன் படப்பிடிப்பு
Published on

நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘அரசன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் 2-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியுள்ளது. வடசென்னையை மையமாக கொண்டு படம் உருவாகி வருவதால் வடசென்னை போல் அரங்குகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com