மீண்டும் ஒரு 1000 கோடி? மாஸ் காட்டும் ‘துரந்தர் 2’... 4 நாட்களில் ரூ.761 கோடி வசூல்!

துரந்தர்: தி ரிவெஞ்ச்' படம் 4 நாட்களில் ரூ.761 கோடி வசூலித்து சாதனை
மீண்டும் ஒரு 1000 கோடி? வசூலில் மாஸ் காட்டும் ‘துரந்தர் 2’... 4 நாட்களில் ரூ.761 கோடி வசூல்!
Published on

ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் துரந்தர். இப்படம் நல்ல வரவேற்பை பெற அதன் இரண்டாம் பாகமான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' உருவாகி 19ம் தேதி வெளியானது.

இப்படத்தில் மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, டேனிஷ் பாண்டோர், சாரா அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் வெளியான நான்கு நாட்களில் உலகளவில் ரூ.761 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.550 கோடியும், உலக நாடுகளில் ரூ.211 கோடியும் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விரைவில் 1,000 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியலில் அதிரடியாக நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகம் ரூ.1307 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com