அனிருத் - காவ்யா மாறன் திருமணம் உறுதி?- வெளிப்படையாக பேசிய ஒய்.ஜி.மகேந்திரன்!

"அவள் சாதாரண பெண் இல்லை, ஐபிஎல் டீமையே நடத்துபவள்" யூடியூப் நேர்காணலில் ரகசியத்தை உடைத்த ஒய்.ஜி.மகேந்திரன்!
Anirudh Kavya Maran
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், ஐபிஎல் 'சன்ரைசர்ஸ் ஐதராபாத்' அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.

இந்நிலையில், இந்தத் திருமணச் செய்தியை உறுதி செய்யும் வகையில், அனிருத்தின் உறவினரும், மூத்த நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, பிரபல நடிகை குட்டி பத்மினி ஒய்.ஜி.மகேந்திரனிடம் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஒய்.ஜி.மகேந்திரன்,"இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக பரவிவரும் தகவலுக்கு, நான் கேள்விப்பட்ட தகவலின் அடிப்படையில் இதை உறுதியாக சொல்கிறேன். அனிருத் மிகவும் நல்ல பையன் அவருக்கு வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து காவ்யா மாறனைப் பற்றிப் பேசிய ஒய்.ஜி.மகேந்திரன், "அந்தப் பெண் ஒன்றும் சாதாரண பெண் கிடையாது. அவ்வளவு பெரிய ஐபிஎல் கிரிக்கெட் டீமையே மிகச் திறமையாக வழிநடத்தக்கூடிய சாமர்த்தியம் அவரிடம் இருக்கிறது.

தந்தை கலாநிதி மாறனின் தொழில் நுணுக்கங்களை அப்படியே பாரம்பரியமாகப் பெற்றுள்ளார். இவர்கள் இருவருமே மிகச்சிறந்த ஜோடி " என்று பாராட்டியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com