இசையமைப்பாளர் அனிருத்-காவ்யா மாறன் விரைவில் திருமணம்- நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பரபரப்பு தகவல்

நவம்பர் மாத இறுதியில் ஸ்பெயினில் திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Anirudh Ravichander and Kavya Maran  marriage buzz
Published on

இசையமைப்பளர் அனிருத் ரவிச்சந்தரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனிருத்தின் மாமா-வும், நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன், இவர்களின் திருமணம் உறுதியாக நடக்கும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில், “நான் கேள்விப்பட்ட வரையில், அவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள்.

அந்தப் பெண் ஒரு சாதாரணமான பெண் அல்ல. இவ்வளவு பெரிய ஐபிஎல் அணியை கையாளும் திறன் அவருக்கு இருக்கிறது.

அவர் தன் தந்தையின் வணிக மரபணுக்களைப் பெற்றிருக்கிறாள். அவர்கள் ஒரு நல்ல ஜோடி. அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இசைத் தொழிலில் ஈடுபட வேண்டும்” என்று கூறினார்.

இதையடுத்து அவரது இந்த கருத்து சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் வரும் நவம்பர் மாத இறுதியில் ஸ்பெயினில் திருமணம் நடைபெறும் என்றும், அதைத்தொடர்ந்து சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com