ஜப்பானில் ராஷ்மிகா.. 2026 Anime விருது விழாவில் இந்திய சினிமாவுக்கு கெளரவம்

Black Panther பட நடிகர் வின்ஸ்டன் டியூக் உடன் மேடையேறினார்.
ஜப்பானில் ராஷ்மிகா.. 2026 Anime விருது விழாவில் இந்திய சினிமாவுக்கு கெளரவம்
Published on

ஹாலிவுட்டில் அனிமேஷன் போல ஜப்பானில் அனிமே (Anime)க்கள் பிரசித்தம். இவற்றுகென தனித்த விஷுவல் ஸ்டைல் உள்ளது.

உலகம் முழுவதும் அனிமே படங்கள் மற்றும் சீரீஸ்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

சோனி நிறுவனம் கிரன்ச்சிரோல் (crunchyroll) என்ற அனிமே ஸ்ட்ரீமிங் தளம் ஒன்றை நடத்தி வருகிறது. இந்த தளம் வருடாந்திர அனிமே விருதுகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் 10வது சர்வதேச Anime Awards 2026 விழா ஜப்பானின் டோக்கியோவில் நேற்று (மே 23) நடைபெற்றது.

இதில் இந்தியாவின் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்துகொண்டார்.

Black Panther பட நடிகர் வின்ஸ்டன் டியூக் உடன் மேடையேறிய ராஷ்மிகா, இந்த ஆண்டின் ‘சிறந்த அனிமேஷன்’ விருதை வழங்கினார்.

Solo Leveling Season 2 -Arise from the Shadows என்ற படத்திற்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய நடிகையாக ராஷ்மிகா இதில் பங்கேற்று விருதை வழங்கியது, இந்திய சினிமாவுக்கு கிடைத்த கவுரவமாக பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com