Anikha Surendran| எதிர்காலத்தில் எனக்கு யாருடன் போட்டி? அனிகா சுரேந்திரன் பதில்

Anikha Surendran| எதிர்காலத்தில் எனக்கு யாருடன் போட்டி? அனிகா சுரேந்திரன் பதில்
Published on
Summary

எனக்குள் எந்த ஈகோவும் கிடையாது.

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, தற்போது கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர், அனிகா சுரேந்திரன். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், 'உங்களுக்கு எந்த நடிகை எதிர்காலத்தில் போட்டியாக வரக்கூடும்?" என்று கேட்கப்பட்டது.

அதற்கு அனிகா பதிலளிக்கையில், "நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். என்னைவிட திறமைசாலி நடிகைகள் நிறைய இருக்கிறார்கள் என்பதே உண்மை. அப்படித்தான் நான் நினைக்கிறேன். தேவைப்படும் பட்சத்தில் மற்ற நடிகைகளுடன் இணைந்து நடிக்கவும் நான் தயார்.

எனக்குள் எந்த ஈகோவும் கிடையாது" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com