விளையாட்டு வீரர்களின் இன்னல்களை சொல்லும் ‘அங்கீகாரம்’- கவனத்தை ஈர்க்கும் டிரெய்லர்

தடகள விளை​யாட்டை மைய​மாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்​படம், விளை​யாட்டு வீரர்​களின் இன்​னல்​களை​யும், விளையாட்​டுத் ​துறை​யின் அவலங்​களை​யும் எடுத்துக்கூறுகிறது.
விளையாட்டு வீரர்களின் இன்னல்களை சொல்லும் ‘அங்கீகாரம்’- கவனத்தை ஈர்க்கும் டிரெய்லர்
Published on

த​யாரிப்​பாளர் கே.ஜெ.ஆர்.ராஜேஷ் கதா​நாயக​னாக நடிக்​கும் படம் ‘அங்​கீ​காரம்’. ஜேபி. தென்​பா​தி​யான் இயக்​கும் இப்படத்தில் சிந்தூரி விஸ்​வ​நாத், விஜி வெங்​கடேஷ், ஆண்டனி, மன்​சூர் அலி​கான், மோகன்​ராம் மற்​றும் பலர் நடித்துள்ளனர்.

ஸ்வஸ்​திக் விஷன்ஸ் சார்​பில் பிர​சாந்த் - அஜித் பாஸ்​கர் - அருண்​ முரு​கன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்​ரான் இசையமைத்துள்ளார். ஏ.விஸ்​வ​நாத் ஒளிப்​ப​திவு மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. டிரெய்லரில், தடகள விளை​யாட்டை மைய​மாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்​படம், விளை​யாட்டு வீரர்​களின் இன்​னல்​களை​யும், விளையாட்​டுத் ​துறை​யின் அவலங்​களை​யும் எடுத்துக்கூறுகிறது. இப்படத்திற்காக ரூ.75 லட்​சம் செல​வில் கோர்ட் வளாக செட் அமைக்​கப்​பட்டு படமாக்​கப்​பட்​டது. ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com