அந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை... ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா படங்கள் நடிப்பது போக, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பாடல் கச்சேரிகளும் நடத்தி வருகிறார்.
அந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை... ஆண்ட்ரியா
Published on

நடிப்பு தாண்டி பாடகியாகவும் கலக்கி வருபவர் ஆண்ட்ரியா. படங்கள் நடிப்பது போக, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பாடல் கச்சேரிகளும் நடத்தி வருகிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம், 'என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை? என்று கேட்கப்பட்டது.

அதற்கு ஆண்ட்ரியா "காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் என எல்லாமே பண்ணிவிட்டேன். ஆனால் முழுமையான காமெடி படத்தில் நான் நடித்தது கிடையாது. நடித்த படங்களிலும் பெரியளவில் காமெடி செய்தது கிடையாது.

அந்தவகையில் ஒரு நல்ல நகைச்சுவை படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அது நடக்குமா? என்று பார்க்கலாம்", என்று பதிலளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com