

மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே நேற்று (ஏப்ரல் 12) காலமானார். அவருக்கு வயது 92.
மும்பையில் வசித்து வந்த அவர். நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு மாரடைப்பு காரணமாக உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இன்று மும்பையில் சிவாஜி பூங்காவில் அவரது உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது.
திரைபிரபலங்கள், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்கள், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
ஆஷா போஸ்லே
மகாரஷ்டிராவின் சாங்கியில் 1933 ஆம் ஆண்டு பிறந்த ஆஷா போஸ்லே மறைந்த புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆவார்.
தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மொழில்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள ஆஷா போஸ்லே 70 ஆண்டுக்கு மேலாக இந்திய திரையிசையின் ஒரு சகாப்தத்தை தனது குரலால் கட்டிப்போட்டவர் ஆவார்.
2000ல் தாதா சாகேப் பால்க்கே விருதும், 2008ல் பத்மவிபூஷனும், இரு முறை தேசிய திரைப்பட விருதும் ஆஷா போஸ்லேவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழில் ஹே ராம் படத்தில் வரும் 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி' உள்பட இளையராஜா இசையில் பல்வேறு பாடல்களை ஆஷா போஸ்லே பாடியுள்ளார்.