

அமெரிக்கன் பை படத்தில் நடித்த ஷானன் எலிசபெத் ஒன்லி பேன்ஸ் கணக்கை தொடங்கி உள்ளார். தமிழ் திரை உலக பிரபலங்களான தர்ஷா குப்தா, அபிராமி வெங்கடாசலம் உள்பட பலர் சமீபத்தில் சந்தா சேவையை தொடங்கி வருமானத்தை பெருக்கி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 16-ந்தேதி தனது கணக்கை தொடங்கிய ஷானன் எலிசபெத் ஒரு வாரத்தில் ரூ.11 கோடி வருமானத்தை பெற்றுள்ளார். ஹாலிவுட் திரை உலகில் 2000-ம் ஆண்டில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்த ஷானன் எலிசபெத் கூறும் போது, ஹாலிவுட் படங்களின் கட்டுப்பாடு என்னை சலிப்படைய செய்துள்ளது.
ஒன்லி பேன்ஸ் தளம் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு கவர்ச்சியான பக்கத்தை வெளிப்படுத்தவும், ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்கவும் உதவுகிறது. என் விருப்பப்படி கருத்துக்களை உருவாக்கவும், சுதந்திரமாக இருக்கவும் அனுமதிக்கிறது. இதுவே என் எதிர்காலம் என நான் உறுதியாக நம்புகிறேன்’ என்றார்.