ஸ்பெஷல் நாளில் ரீ- ரிலீஸ் ஆகும் 'அமர்க்களம்'

அஜித்- ஷாலினி இணைந்து நடித்த ‘அமர்க்களம்’ மீண்டும் வெளியாக உள்ளதாக இயக்குநர் சரண் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
ஸ்பெஷல் நாளில் ரீ- ரிலீஸ் ஆகும் 'அமர்க்களம்'
Published on

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் ‘பாட்ஷா’, ‘பாபா’, கமல்ஹாசனின் ‘நாயகன்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘ஆளவந்தான்’, விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’, விஜய்யின் ‘கில்லி’, ‘சச்சின்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, தனுசின் ‘யாரடி நீ மோகினி’, சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

இந்த வரிசையில், அஜித்- ஷாலினி இணைந்து நடித்த ‘அமர்க்களம்’ மீண்டும் வெளியாக உள்ளதாக இயக்குநர் சரண் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் எந்த தேதியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், அஜித்- ஷாலினி திருமணநாளை முன்னிட்டு இருவரும் இணைந்து நடித்த ‘அமர்க்களம்’ படம் மீண்டும் வருகிற 24-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அமர்க்களம்’ அஜித்தின் திரைப்பயணத்தில் 25வது படமாகும். மேலும், இதுவே அவர் தன் மனைவி ஷாலினியுடன் இணைந்து நடித்த ஒரே திரைப்படமும் ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com