அமரன் வெற்றி.. ஜி.வி.பிரகாஷுக்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்

900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் சுமார் ரூ.170 கோடி வரை வசூலித்துள்ளதுசாய் பல்லவியின் இன்ட்ரோ பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அமரன் வெற்றி.. ஜி.வி.பிரகாஷுக்கு ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்த  சிவகார்த்திகேயன்
Published on

 நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது.

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் சுமார் ரூ.170 கோடி வரை வசூலித்துள்ளது. விரைவில் ரூ.200 கோடியை நெறுங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹே மின்னலே பாடல் அனைவரது ரிங்டோனாக மாறி வருகிறது. மேலும், சாய் பல்லவியின் இன்ட்ரோ பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். 'அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு இனிய பரிசு வழங்கியதற்கு நன்றி' என எக்ஸ் தளத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com