ஃபிட்னஸ் கோச்சை கரம்பிடிக்கும் ஆலியா பட் தங்கை!

ஷாகீன் பட் தனது காதலருடனான புகைப்படங்களை சமூக வலைதங்களில் பகிர்ந்துள்ளார்.
ஃபிட்னஸ் கோச்சை கரம்பிடிக்கும் ஆலியா பட் தங்கை!
Published on

பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தங்கை ஷாகீன் பட், தனது ஃபிட்னஸ் பயிற்சியாளர் இஷான் மெஹ்ராவை விரைவில் கரம்பிடிக்க உள்ளார். இருவரும் நிச்சயம் செய்துகொண்டது தொடர்பான புகைப்படங்களை இஷான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த ஜோடிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை ஆலியா பட் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ராகா என்ற 3வயது மகள் உள்ளார். தற்போது இருவரும் சஞ்சய் லீலா பன்சாலியின் ' லவ் அண்ட் வார்' படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர்.

ஷாஹீன் ஒரு திரைக்கதை எழுத்தாளர் மற்றும் மனநல ஆர்வலர் ஆவார். மனநல விழிப்புணர்வு அமைப்பான Here Comes the Sun-ன் நிறுவனராகவும் உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com