24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்த அலைபாயுதே ஜோடி

2000 ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்தது அலைபாயுதே திரைப்படம் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது.
24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்த அலைபாயுதே ஜோடி
Published on

2000-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷாலினி அஜித்குமார். 2000 ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அனைவரும் மனதில் இடம்பிடித்தார்.

இப்படத்தில் அவர்களது கதாப்பாத்திரத்தின் பெயரான கார்த்திக் மற்றும் சக்தி மிகவும் பிரபலம் அடைந்தது. இப்படத்தை ரசிக்காதோர் யாரும் இருக்க முடியாது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. இன்றும் பச்சை நிறமே , யாரோ யாரோடி, சிநேகிதனே பாடல்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும், மக்கள் அன்றாட கேட்கும் பாடல்கள் லிஸ்டில் முக்கிய பங்கை வகிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் ஷாலினி அவ்வப்போது குடும்பங்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தையும். அஜித் குமாருடன் சுற்றுலா செல்லும் போது எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை  பகிர்வார்.

நேற்று அவர் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 24 ஆண்டுகளுக்கு பிறகு தன் அலைபாயுதே ஜோடியான மாதவனுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்றென்றும் புன்னகை என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்து அதை வைரலாக்கி வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com