அஜித் தாயார் மரணம்: கமல்ஹாசன் இரங்கல்

அஜித்தின் தாயாரான மோகினி மணி வயது மூப்பு காரணமாக மரணம்.
அஜித் தாயார் மரணம்: கமல்ஹாசன் இரங்கல்
Published on

நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 84. அஜித்தின் தாயாரான மோகினி மணி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.

அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com