AK64 படத்தை தயாரிக்கிறாரா அஜித்?

இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.
AK64 படத்தை தயாரிக்கிறாரா அஜித்?
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்துள்ள அஜித்குமார் தற்போது தொடர் கார் பந்தயங்களில் பிசியாக இருக்கிறார்.

'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து அவர் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியானது. இதற்கிடையில் நடிகர் தாண்டி அஜித்குமார் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ஆம், இனி தயாரிப்பாளராகவும் அஜித்குமார் மாறவுள்ளார்.

அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்.எல்.சி. என்ற பெயரில் அவர் புதிய நிறுவனத்தை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் (பிலிம் சேம்பர்) பதிவு செய்திருக்கிறார். மேலும் ரூ.2.56 லட்சம் செலுத்தி ஆயுட்கால உறுப்பினராகவும் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

தயாரிப்பாளராகிவிட்டால் இனி படங்களில் அஜித் நடிப்பாரா, மாட்டாரா? என்ற கேள்வியையும் எழச் செய்தது.

இந்த நிலையில், அஜித் நடிக்க இருக்கும் படம் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகிஉள்ளது.

அதன்படி, அஜித்தின் அடுத்த படமான AK64-ஐ ஆதிக் ரவிசந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தை அஜித்தே தயாரிக்கிறார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.

அடுத்த 15 நாட்களுக்கு, பந்தயம் மற்றும் திரைப்படப் படப்பிடிப்பு என அஜித் மிகவும் மும்முரமாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com