HBD AK | நம் தேசத்தின் மிகப்பெரிய பெருமை | அஜித் குமாருக்கு இயக்குநர் ஆதிக் வாழ்த்து

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கஎஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
HBD AK | நம் தேசத்தின் மிகப்பெரிய பெருமை | அஜித் குமாருக்கு இயக்குநர் ஆதிக் வாழ்த்து
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். நடிப்பு மட்டுமின்றி ரேசிங், பைக் பயணம் என தொடர்ந்து பிசியாக வலம் வருகிறார். இன்று (மே 01) தனது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் அஜித் குமாருக்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கஎஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்த பதிவில் அவர், "பிறந்தநாள் நல்வாழ்த்துகள், என் அன்பிற்குரிய ஐயா ❤️🙏🏻 என்னையும், எங்களை அனைவரையும் ஊக்கப்படுத்தியதற்கும்; இந்தியா 🇮🇳 பெருமை கொள்ளும் வகையில் திகழ்வதற்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

நீங்களே நம் தேசத்தின் மிகப்பெரிய பெருமை ❤️ எங்கள் 'பத்ம பூஷன்' ❤️ உங்கள் அன்பு மற்றும் கருணையைப் பெறும் பாக்கியம் எனக்கு எப்போதும் வாய்த்து வருகிறது.

உங்களைச் சந்தித்த அந்த நாளுக்காகவும், உங்களுடன் இணைந்து பணியாற்றியதற்காகவும், #GoodBadUgly மூலம் மறக்க முடியாத நினைவுகளை படைத்ததற்காகவும் நான் மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன்; இவை அனைத்தும் ஏதோ ஒரு கனவு போலத் தோன்றுகின்றன.

மிக விரைவில், இன்னும் பல சிறப்பான நினைவுகளை உங்களுடன் இணைந்து உருவாக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com