அழகை பராமரிக்க நடிகைகளின் அற்புத பானங்கள்...

நெய், மஞ்சள், மிளகு போன்றவற்றை தண்ணீரில் கலந்து குடிக்கிறார்.
அழகை பராமரிக்க நடிகைகளின் அற்புத பானங்கள்...
Published on

திரை உலகில் நடிகைகள் தங்கள் அழகையும் உடலையும் பராமரிப்பதில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர். முறையான உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடுகளும் நடிகைகளை இளமையாக வைத்துள்ளது. பாலிவுட் நடிகைகள் தங்களது அழகை பராமரிக்க காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் பிரத்யேக பானங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

கீர்த்தி சுரேஷ்: அதிகாலையில் கிரீன் ஜூஸ் குடிக்கிறார். வெந்நீரில் வேக வைத்த கீரை இலைகளுடன் செலரி, எலுமிச்சை, வெள்ளரிக்காய், புதினா, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து இந்த பானத்தை கீர்த்தி சுரேஷ் அருந்துகிறார்.

தீபிகா படுகோனே: தீபிகா தனது கூந்தலை அடர்த்தியாகவும் சருமத்தை பொலிவாகவும் வைத்திருக்க புதினா, மஞ்சள், வேப்பிலைகள், கறிவேப்பிலை, பீட்ரூட் ஆகியவற்றை கலந்த சாறு தயாரித்து வெறும் வயிற்றில் குடிக்கிறார்.

கத்ரீனா கைப்: காலையில் எழுந்ததும் வெந்நீர், சில நேரங்களில் அதில் எலுமிச்சை சாறு, அல்லது இஞ்சி சாறு சேர்ப்பார். அதற்கு பிறகுதான் உடற்பயிற்சிக்கு செல்வார்.

மலைக்கா அரோரா: வெறும் வயிற்றில் சீரகம் செலரி மற்றும் பெருஞ்சீரகம் கலந்த நீரை அருந்துகிறார். இந்த பொருட்களை வறுத்த பின் இரவு முழுவதும் அதை தண்ணீரில் ஊற வைத்து காலையில் லேசாக சூடாக்கி எலுமிச்சை கலந்து குடிக்கிறார்.

ஷில்பாஷெட்டி: நெய், மஞ்சள், மிளகு போன்றவற்றை தண்ணீரில் கலந்து குடிக்கிறார்.

ஆலியாபட்: அதிகாலையில் எலுமிச்சையுடன் கூடிய வெந்நீர் குடிப்பதாக கூறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com