அந்த இயக்குநர் மோசமாக நடந்து கொண்டார்.... நடிகை மோனலிசா பரபரப்பு புகார்!

சமீபத்தில் நடிகை மோனலிசா, நடிகர் பர்மான் கானை காதல் திருமணம் செய்துகொண்டார்.
அந்த இயக்குநர் மோசமாக நடந்து கொண்டார்.... நடிகை மோனலிசா பரபரப்பு புகார்!
Published on: 

உத்தரபிரதேசத்தில் நடந்த கும்பமேளா மூலம் புகழ்பெற்றவர் மோனலிசா. இவர் இந்தி திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இயக்கிய திரைப்படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் நடிகை மோனலிசா, நடிகர் பர்மான் கானை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில் நடிகை மோனலிசா கொச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தி திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்னிடம் பல முறை மோசமாக நடந்து கொண்டார். டேராடூன், நேபாளம் போன்ற பகுதிகளில் நடந்த திரைப்பட படப்பிடிப்பின்போது, எனது உடலை தொட்டு பெண்மையை அவமதித்தார். ஆனால், எனது குடும்பத்தினருக்கு பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்ததால், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது உண்மையை மூடி மறைக்க, திரைப்பட இயக்குநர் எனக்கு எதிராக தேவையற்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com