நடிகை மேகா ஆகாசுக்கு விரைவில் டும் டும் டும்

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.நடிகை மேகா ஆகாஷ் நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகி உள்ளது.
நடிகை மேகா ஆகாசுக்கு விரைவில் டும் டும் டும்
Published on

தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவாதான் வருவேன், தனுஷிற்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மேகா ஆகாஷ்.

தனுசுக்கு ஜோடியாக நடித்து, `மறுவார்த்தை பேசாதே' பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஹீரோயின்கள் அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் அல்லது சக நடிகர்களைத் திருமணம் செய்து கொள்வது மிக சகஜமான ஒரு விஷயம் ஆகிவிட்டது.

இந்த வரிசையில் பிரபல அரசியல்வாதியின் மகன் சாய் விஷ்ணு என்பவரை நடிகை மேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ் தன்னுடை வலைதள பக்கத்தில் அவரிடைய நிச்சயதார்த்த போட்டோக்களை பகிர்ந்து அதில், தன்னுடைய ஆசை நிறைவேறியதாக' தெரிவித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

https://iflicks.in/

X

Maalai Malar
www.maalaimalar.com