‘சிஸ்டம்’ படத்தில் அபார நடிப்பு..! ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங் விருதை வென்ற நடிகை ஜோதிகா

ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ள ஜோதிகாவின் கலைப் பயணத்தில்மேலும் ஒரு மகுடம்.
Actress Jyothika
Published on

அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘சிஸ்டம்’ படத்தில் சரிதா என்ற கதாபாத்திரத்தில், உணர்வுப்பூர்வமான மற்றும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, சிறந்த நடிகைக்கான விமர்சகர்களின் தேர்வு விருதை நடிகை ஜோதிகா பெற்றுள்ளார்.

அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில், சோனாக்ஷி சின்காவுடன் இணைந்து ஜோதிகா நடித்துள்ள இத்திரைப்படம், சவாலான மற்றும் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஜோதிகா எவ்வளவு நேர்த்தியாகக் கையாள்கிறார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

‘சிஸ்டம்’ என்ற பெரு அமைப்பிலிருந்து தப்பிக்கவும், அதே நேரத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்கவும் போராடும் ஒரு நடுத்தர வர்க்கப் பெண்ணின் தைரியமான மற்றும் கண்ணியமான பாத்திரத்தை மிகச்சிறப்பாகக் கையாண்டதற்காக ஜோதிகாவின் நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், 2026-ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான இந்த ‘ஐகானிக் கோல்ட் ஸ்ட்ரீமிங் விருது’ (விமர்சகர்கள் தேர்வு), ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ள அவரது கலைப்பயணத்தில் மேலும் பல மகுடங்களை சேர்ப்பதற்கான ஒரு புதிய தொடக்கமாகும்.

மொழி எல்லைகளைத் தாண்டி, தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு புதிய கதைக்களத்தைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முக்கிய கதாபாத்திரமாக அமைய வேண்டும் என்பதில் ஜோதிகா எப்போதும் உறுதியாக இருக்கிறார்.

அவரது திரையுலக பயணத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அவரது இடைவிடாத தேடலுக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரமே இந்த விருது.

X

Maalai Malar
www.maalaimalar.com