Biker | ஒருத்தன் Dream இன்னொருத்தன் Career - நடிகர் சூர்யா வெளியிட்ட பைக்கர் டிரெய்லர்

பைக்கர் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
Biker | ஒருத்தன் Dream இன்னொருத்தன் Career - நடிகர் சூர்யா வெளியிட்ட பைக்கர் டிரெய்லர்
Published on

சார்மிங் ஸ்டார் ஷர்வானந்த் மற்றும் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "பைக்கர்." யு.வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் நடிகர் ராஜசேகர், பிரமாஜி மற்றும் நடிகை மாளவிகா நாயர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு பணிகளை யுவராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பாளராக அனில் பாசலா பணியாற்றியுள்ளார். இந்தியாவின் முதல் மோட்டோகிராஸ் திரைப்படமாக "பைப்கர்" உருவாகி இருக்கிறது.

வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி உலகளவில் வெளியாகும் நிலையில், பைக்கர் திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

டிரெய்லரின் படி இந்தப் படம் மோட்டோகிராஸ் (ஆஃப்-ரோடு மோட்டார்சைக்கிள் ரேசிங்) பந்தயம் தொடர்பான கதையம்சம் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com