‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு- சிறப்பு வீடியோ வெளியிட்ட சூரி

வீடியோவில் ஒவ்வொரு காட்சிகளும் உருவாக்கப்பட்ட விதம் மற்றும் அனைவரின் அயராது உழைப்பு குறித்தும் இடம்பெற்றுள்ளது.
‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு- சிறப்பு வீடியோ வெளியிட்ட சூரி
Published on

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளியான படம் ‘மாமன்’. லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்து இருந்தார். அக்காவின் மகனுக்கும், தாய்மாமனுக்கும் இடையே நடைபெறும் பாசப்போராட்டத்தால் குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளை தாண்டி ஒன்று சேரும் குடும்பக் கதை. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் சூரிக்கு பாராட்டுதல்களையும் பெற்றுத்தந்துள்ளது. ‘விடுதலை’, ‘மாமன்’ படங்கள் நடிகர் சூரிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளது.

இதனை தொடர்ந்து, நடிகர் சூரி நடித்து வரும் படம் ‘மண்டாடி’. இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் மீனவர் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘மண்டாடி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். வீடியோவை வெளியிட்டு, படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார். வீடியோவில் ஒவ்வொரு காட்சிகளும் உருவாக்கப்பட்ட விதம் மற்றும் அனைவரின் அயராது உழைப்பு குறித்தும் இடம்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com