சூரியின் அடுத்த படத்திற்கான அப்டேட்

நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 16-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
சூரியின் அடுத்த படத்திற்கான அப்டேட்
Published on

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மாமன்'. லார்க் ஸ்டுடியோ சார்பில் கே.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 16-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகர் சூரியின் அடுத்த படத்திற்கான டைட்டில் லுக் போஸ்டர் நாளை காலை 11.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், 'காயத்தை உண்டாக்கிய ஈட்டியால் மட்டுமே குணப்படுத்த முடியும்' என்ற வசனத்துடன் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com