மல்லுவுட்டில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா

பிரபல இயக்குனர் விபின் தாஸ், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்.எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்.
மல்லுவுட்டில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா
Published on

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். குஷி, வாலி உள்ளிட்ட படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

படங்களை இயக்கி வந்த எஸ்.ஜே.சூர்யா, பிறகு, அவர் இயக்கும் படங்களில் அவரே நடித்தும் வந்தார். சமீப காலமாக, பிற இயக்குனர்களின் இயக்கத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

அந்த வகையில், ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்கள் எஸ்.ஜே.சூர்யாவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. 

தமிழ் திரைத்துறையைத் தொடர்ந்து, நடிகர் நானியின் 31வது படமான 'அடடே சுந்தரா' என்கிற படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறையில் நுழைகிறார் எஸ்.ஜே.சூர்யா. தெலுங்கு தொடர்ந்து மலையாளத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடிகராக அறிமுகம் ஆகிறார்.

பிரபல இயக்குனர் விபின் தாஸ், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இயக்குனர் விபின் தாஸ் ஐதராபாத்தில் எஸ்.ஜே. சூர்யாவை சந்தித்து படம் குறித்து பேசியுள்ளார். மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் தற்போது வெளியாகவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com