

தமிழ் திரை உலகில் பிரபல நடிகராக திகழ்ந்தவர் ரவி கிருஷ்ணா. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி என்ற படத்தில் ரவி கிருஷ்ணாவும் சோனியா அகர்வாலும் இணைந்து நடித்திருந்தனர். படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
மேலும் படத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் ஆகியோரின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரவி கிருஷ்ணா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
படத்தில் இடம் பெற்ற ஜனவரி மாதம் பாடல் படப்பிடிப்பின் போது சோனியா அகர்வால் நகங்களால் என் முதுகை கீற வேண்டியிருந்தது. இதனால் என் முதுகு வீங்கி எனக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டது. செல்வராகவனிடம் பணியாற்றுவது எளிதான காரியம் இல்லை.
காலை 5.30 அல்லது 6 மணிக்குள் அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டும். செல்வராகவன் படங்களில் சோம்பல் என்பதே இல்லை. இரவு பகலாக படப்பிடிப்பு நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.