35 வயதில் தற்கொலை செய்துகொண்ட நடிகர்... ரசிகர்கள் சோகம்

நிதின் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவருடன் நடித்த நடிகர்களுள் ஒருவரான விபுதி தாக்குர் சமூக வலைத்தளத்தில் உருக்கமாபக பதிவிட்டுள்ளார்.சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
35 வயதில் தற்கொலை செய்துகொண்ட நடிகர்... ரசிகர்கள் சோகம்
Published on

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் நகரை சேர்ந்தவர் நிதின் சவுகான். இவருக்கு வயது 35 ஆகிறது. மும்பை நகரில் வசித்து வந்த இவர், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். 'எம்.டி.வி.யின் ஸ்பிளிட்ஸ்வில்லா 5', 'க்ரைம் பட்ரோல்', 'தேரா யார் ஹூன் மெயின்' போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நிதின் சவுகான் தற்கொலை செய்து உயிரிழந்துள்ள சம்பவம் அவரது ரசிர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிதின் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவருடன் நடித்த நடிகர்களுள் ஒருவரான விபுதி தாக்குர் சமூக வலைத்தளத்தில் உருக்கமாபக பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com