நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்

முத்துக்காளையின் மனைவி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்
Published on

தமிழக சினிமாவில் காமெடி நடிகராக மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகர் முத்துக்காளை. இவரது மனைவி மாலதி (47). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

மாலதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில் ரத்து கசிவு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 19 நாட்களுக்கு முன்பு கேஎம்சி மருத்துவமனையில் இதற்காக அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

இருப்பினும், நோய் தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக மூச்சுவிட சிரமப்பட்டு வந்தார். இதற்காக, மனைவிக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க உதவக்கோரி முத்துக்களை தமிழக முதல்வர் விஜயிடம் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்தார்.

இதைதொடர்ந்து, அமைச்சர் ராஜ்மோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து, உயர் சிகிச்சைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாலதி இன்று காலை 9 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது உடல் இறுதி சடங்கிற்காக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, சங்கம்பட்டி ‌என்ற திருக்கோதையாபுரம் எடுத்துச் செல்லப்படுகிறது!

இறுதிச்சடங்கு இன்று இரவு அவரின் சொந்த ஊரில் நடைபெறுகிறது. முத்துக்காளையின் மனைவி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com