மேடையிலேயே படத்தின் கதையை சொன்ன நடிகர் ஜான் கொக்கேன்

திரையரங்கின் பெரிய திரையில் பார்த்தால்தான் அதன் உண்மையான அனுபவத்தை உணர முடியும்.
மேடையிலேயே படத்தின் கதையை சொன்ன நடிகர் ஜான் கொக்கேன்
Published on

புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்”.

இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது.

ரிலீஸ் அப்டேட்:

வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிககையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் நடிகர் ஜான் கொக்கேன் பேசும் போது, “‘நாகபந்தம்’ ஒரு மிகப்பெரிய காட்சிப் பிரம்மாண்டம் கொண்ட திரைப்படம். தற்போது ஓ.டி.டி. காலகட்டமாக இருந்தாலும், இப்படிப்பட்ட திரைப்படங்களை சிறிய திரையில் முழுமையாக ரசிக்க முடியாது. இந்த படத்தை கட்டாயம் திரையரங்கின் பெரிய திரையில் பார்த்தால்தான் அதன் உண்மையான அனுபவத்தை உணர முடியும்.

கதை:

டிரெய்லரில் நீங்கள் பார்த்ததுபோல, நாகபந்தம், பிரம்மகமலம் மற்றும் அதனை சுற்றிய மர்மங்கள் கதையின் மையமாக இருக்கின்றன.

நாயகன் விராட் கர்ணா அந்த மர்மத்தை தேடும் பயணத்தில் செல்லும்போது, பார்வையாளர்களும் அவருடன் இணைந்து அந்த பயணத்தை அனுபவிப்பார்கள். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் அந்த தேடலின் ஒரு பகுதியாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com