நடிகர், கார் ரேசர் என்பதை தாண்டி கிரிக்கெட்டிலும் மாஸ் காட்டும் அஜித்...

திருமண நாள், பிறந்தநாள் கொண்டாட்டங்களை மனைவி, மகன், மகளுடன் கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கிரிக்கெட் விளையாடும் நடிகர் அஜித்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்துள்ள அஜித்குமார் தொடர் கார் பந்தயங்களில் பங்கேற்று பிசியாக இருந்தார்.

இதனிடையே, 'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து அவர் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார் என்று தகவல் வெளியானது. இதற்கிடையில் நடிகர் என்பதை தாண்டி அஜித்குமார், தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார்.

அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்.எல்.சி. என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் (பிலிம் சேம்பர்) பதிவு செய்திருக்கிறார்.

இதனிடையே, வெளிநாட்டில் கார் ரேசில் பங்கேற்று வந்த நடிகர் அஜித், தமிழக சட்டசபை தேர்தலில் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக சென்னை திரும்பினார். இதன்பின் திருமண நாள், பிறந்தநாள் கொண்டாட்டங்களை மனைவி, மகன், மகளுடன் கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், நடிகர் அஜித், கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், விக்கெட் கீப்பர், பேட்டிங் என அஜித் கிரிக்கெட் விளையாடுகிறார். இதன்மூலம் நடிகர் அஜித் தான் பந்தய வீரர் மட்டுமல்ல கிரிக்கெட் வீரரும் கூட என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். வீடியோவை அஜித்தின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com