Prashanth | ஒவ்வொருவருக்கும் வீடு என்பது உரிமை - டாப் ஸ்டார் பிரசாந்த்

Prashanth | ஒவ்வொருவருக்கும் வீடு என்பது உரிமை - டாப் ஸ்டார் பிரசாந்த்
Published on
Summary

திரை பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு. ஜோய் ஆலுக்காஸ் தலைமையில், இயக்குநர், நடிகர் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குநர் சரண், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் எஸ்.கே. சம்பத், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகர் சந்தோஷ், நடிகை சார்மி, நல்லி குப்புசாமி, கல்யாண மாலை மோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் பயனாளிக் குடும்பங்களுக்கு இல்லங்கள் முறையாகத் திறந்து வைக்கப்பட்டு, அதற்கான சாவிகளை டாப் ஸ்டார் பிரசாந்த் வழங்கினார். தொடர்ந்து பேசிய டாப் ஸ்டார் பிரசாந்த், "பொதுவாக கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். அதற்கும் ஜோய் ஆலுக்காஸ் தங்களுடைய பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அதை தொடர்ந்து வீட்டை கட்டிப் பார் என்றும் சொல்வார்கள் அதற்கும் ஜோய் ஆலுக்காஸ் தங்களுடைய பங்களிப்பை இன்று தொடங்கி இருக்கிறார்கள். அதனை ஜோய் ஹோம்ஸ் என்று தொடங்கி இருக்கிறார்கள்.‌

வீடில்லாத...நிலமில்லாத.. தமிழகம் முழுவதும் உள்ள மிகவும் கஷ்டப்படும் ஐம்பது குடும்பத்தினரை தேர்வு செய்து ஒரு தரமான - அருமையான - வீட்டை அவர்களுக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் வீடு என்பது உரிமை. அது 'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  வழிவகுத்திருக்கிறது. இதற்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன். இது மிகப்பெரிய சந்தோஷம்,'' என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com