நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளரா: உண்மையை உடைத்த நடிகை மெளனி ராய்

தமிழில் பிரபலமான நாகினி தொலைக்காட்சி தொடரில் சிவன்யா மற்றும் சிவாங்கி என்ற வேடத்தில் சீசன் 1 மற்றும் 2-ல் நடித்துள்ளார்.
Actress Maouni Roy breaks silence on sexuality doubts
Published on

பாலிவுட் நடிகையான மெளனி ராய் முன்னாள் மாடல் அழகியாகவும், நடனக் கலைஞராகவும் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி நடிகர்களில் ஒருவராகவும் பரவலாக அறியப்படுகிறார்.

இவர் தமிழில் பிரபலமான நாகினி தொலைக்காட்சி தொடரில் சிவன்யா மற்றும் சிவாங்கி என்ற வேடத்தில் சீசன் 1 மற்றும் 2-ல் நடித்துள்ளார்.

கடந்த 2022-ல் திருமணம் செய்த இவர், 2026-ல் சமூக வலைதளத்தில் தனது விவாகரத்தை அறிவித்தார்.

இந்நிலையில் யூடியூபில் மோனிகா ஷர்மாவின் அரட்டை நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் மெளனி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில், உங்களைப் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு மிகப்பெரிய வதந்தி எது என்று கேட்கப்பட்டது.

அப்போது அவர், “என்னைப்பற்றி கேள்விப்பட்ட ஒரு வதந்தி நான் ஒரு ‘ஓரினச்சேர்க்கையாளர்’ என்பதுதான்.

எனக்கு எப்போதும் ஒரு பாறையைப் போல உறுதுணையாக நின்ற நண்பர்களும் குடும்பத்தினரும் இருந்ததை நான் மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன்.

எனக்கு ஆதரவளிக்க எப்போதும் சிறந்த தோழிகள் இருக்கிறார்கள். எனது நல்ல, கெட்ட மற்றும் மோசமான காலகட்டங்களில் அவர்கள் என்னுடன் இருந்திருக்கிறார்கள்.

உங்களை உற்சாகப்படுத்தும் அதுபோன்ற பெண்கள் உங்கள் வாழ்க்கையில் இருப்பது மிகவும் அவசியம். என் தோழிகள் மிகச் சிறந்தவர்கள்” என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com