வைரமுத்துவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஆண்டாள் குறித்த சர்ச்சை வழக்கில் வைரமுத்துவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வைரமுத்துவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
Published on

ராஜபாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்சசியில், கவிஞர் வைரமுத்து கலந்துக் கொண்டு, ஆண் டாள் குறித்து பேசினார்.

அப்போது வெளிநாட்டை சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில், ஆண்டளை தேவதாசி என்று குறிப்பிட்டி ருப்பதை மேற்கோள் காட்டி பேசினார். இது செய்தி யாக பத்திரிகைகளில் வெளி யாகின.

இதையடுத்து இந்து அமைப்புகள், பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் வைரமுத்துவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க. நிர்வாகி, எச்.ராஜா, வைரமுத்துவை அசிங்கமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில், வைர முத்துவுக்கு எதிராக கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வைரமுத்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீலை பார்த்து நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

ஆண்டாள் குறித்து வைரமுத்து தன்னுடைய சொந்த கருத்தை கூற வில்லை. வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக் கையை குறிப்பிட்டும், மேற் கோள் காட்டியும் தானே பேசினார்? அப்புறம் எதற்காக இதை அரசியல் ஆக்க வேண்டும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த மனுவுக்கு பிற்பகலில் பதிலளிப்பதாக அரசு வக்கீல் கூறியதால், மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைக்கப்பட்டது. 

பின்னர் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இறுதியாக இந்த விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com