மூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி

விஜய்யின் மெர்சல் படத்தை அடுத்து மூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்க இருக்கிறார் இயக்குனர் அட்லி.
மூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி
Published on

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோரை வைத்து ‘ராஜா ராணி’ படத்தை இயக்கியவர் இயக்குனர் அட்லி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கினார். இப்படமும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.

இதையடுத்து சமீபத்தில் மீண்டும் விஜய்யை வைத்து ‘மெர்சல்’ படத்தை இயக்கினார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து வெளியான இப்படமும் ரசிகர்கள் ஆதரவோடு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் அட்லி. இவர் அடுத்ததாக 3 ஹீரோக்களை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான வேலைகளில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் அட்லி. விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com