ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து: கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக வழக்குப்பதிவு

ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்து மீது ராஜபாளையம் போலீசில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து: கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக வழக்குப்பதிவு
Published on

இந்து கடவுள் ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த வைரமுத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நகர செயலாளர் சூரி வடக்கு போலீஸ் நிலையத்தில் வைரமுத்து மீது புகார் செய்தார்.

அதில், கடந்த 7-ந்தேதி ராஜபாளையத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று பேசிய கவிஞர் வைரமுத்து, இந்து கடவுளான ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

ஆண்டாளை அவமதிப்பு செய்தது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் விசாரணை நடத்தி, கவிஞர் வைரமுத்து மீது அவமதிப்பு வழக்குபதிவு செய்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com