சிங்கில் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் புதிய அபாச்சி ஆர்டிஆர் 200 4வி அறிமுகம்

டிவிஎஸ் நிறுவனம் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளை சிங்கில் சேனல் ஏபிஎஸ் மற்றும் ரைடிங் மோட்களுடன் வெளியிட்டுள்ளது.
டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி
டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி
Published on

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலின் சிங்கில் சேனல் ஏபிஎஸ் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.28 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டூயல் சேனல் வேரியண்ட் விலை ரூ. 1.33 லட்சம் ஆகும்.

புதிய மாடலில் ஏபிஎஸ் நுட்பத்தில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர மற்ற அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்டவை டூயல் சேனல் ஏபிஎஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது. சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடலில் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என மூன்றுவித ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 197.75சிசி, 4-ஸ்டிரோக், 4-வால்வ், ஆயில்-கூல்டு என்ஜின் மற்றும் ரேஸ் டியூன் செய்யப்பட்ட பியூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இதன் அர்பன் மற்றும் ரெயின் மோட்கள் 17.08 பிஹெச்பி பவர், 16.51 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

இதன் ஸ்போர்ட் மோட் 20.54 பிஹெச்பி பவர், 17.25 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ரேஸ் டியூன் செய்யப்பட்ட ஸ்லிப்ர் கிளட்ச் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com