

என்ட்ரி லெவல் பி.எம்.டபுள்யூ. ப்ரியர்களை கவர பி.எம்.டபுள்யூ. இந்தியா முடிவு செய்துள்ளது. அந்த வகையில், தனது வாகனங்களை சந்தைப்படுத்துவதில் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அவ்வாறு பி.எம்.டபுள்யூ. நிறுவனம் சத்தமில்லாமல் ஜி 310 ஆர் காஸ்மிக் பிளாக் மற்றும் ஜி 310 எஸ் மாடலை ஸ்டிராடோ புளு மெட்டாலிக் நிறத்திலும் அறிமுகம் செய்துள்ளது.
இரு நிறங்களும் வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டப்பின் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஃபியூயல் டேன்க் எக்ஸ்டென்ஷன்கள். முன்புற மட்-கார்டு, டெயில்பீஸ் உள்ளிட்டவை தற்சமயம் காஸ்மிக் பிளாக் நிறம் பெற்றிருக்கின்றன.
பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 எஸ் மாடல்களில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், இவை மோட்டார்சைக்கிளின் தோற்றத்தை மேம்படுத்திக் காண்பிக்கிறது. ஸ்டிரீட் ஃபைட்டர் மாடலில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஸ்டிராடோ புளு நிறம் பி.எம்.டபுள்யூ. ஜி 310 எஸ் மாடலில் புதிய நிறம் ஆகும்.
இரண்டு பி.எம்.டபுள்யூ. ஜி 310 மாடல்களிலும் சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு 313 சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.