Royal Enfield | சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான 2026 கெரில்லா 450 - என்ன ஸ்பெஷல்?

புதிய கெரில்லா 450 மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
Royal Enfield | சூப்பர் அப்டேட்களுடன் அறிமுகமான 2026 கெரில்லா 450 - என்ன ஸ்பெஷல்?
Published on

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் 2026 கெரில்லா 450 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய கெரில்லா 450 மாடலின் விலை ரூ. 2.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2026 மாடலுடன் அபெக்ஸ் பெயரில் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் என்ட்ரி-லெவல் அனலாக் வேரியண்ட் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் மேம்பட்ட டயர்கள், மாற்றங்கள் மற்றும் புதிய நிறங்களில் கிடைக்கிறது.

அபெக்ஸ் வேரியண்ட் ஆஃப்-ரோடு சார்ந்த 17-இன்ச் ரெடஸ்டியன் சென்ட்யூரோ ST டயர்களை கொண்டிருக்கிறது. இந்த மாடலில் பிரத்யேக ஹெட்லேம்ப் கவர், பைக்கின் பின்புற இருக்கை மோட்டார்சைக்கிள் நிறத்தாலேயே ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. புதிய அபெக்ஸ் வேரியண்ட்- அபெக்ஸ் ரெட், அபெக்ஸ் பிளாக், அபெக்ஸ் கிரீன் மற்றும் டுவிலைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

இதில் அபெக்ஸ் ரெட் மற்றும் டுவிலைட் புளூ விலை ரூ. 2.49 லட்சம் என்றும் அபெக்ஸ் பிளாக் மற்றும் அபெக்ஸ் கிரீன் நிறங்களின் விலை ரூ. 2.56 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் டேஷ் வேரியண்ட்- ஷேடோ ஆஷ், ஸ்மோக் சில்வர் மற்றும் பிளெக்ஸ் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 2.67 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் ஃபிளாஷ் வேரியண்ட் பிராவா புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2.72 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com