கன்னி: வார ராசிபலன் 22.3.2026 முதல் 28.3.2026 வரை

தம்பதிகளிடம் நிலவிய ஈகோ தணியும். பிரிந்த தம்பதிகள் கூடி வாழும் சந்தர்ப்பம் உருவாகும்.
கன்னி: வார ராசிபலன் 22.3.2026 முதல் 28.3.2026 வரை
Published on

கன்னி

தனித்திறமை மிளிரும் வாரம். ராசி அதிபதி புதன் அஷ்டமாதிபதி செவ்வாய் மற்றும் ராகுவுடன் இணைந்து ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மனதில் தைரியம், தன்னம்பிக்கை கூடும். தள்ளிப்போன பத்திரப் பதிவு, இனிதே நடக்கும். மூத்த சகோதரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு சுமூகமாகும். தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். அரசு உத்தியோகத்திற்கு சாதகமான பதில் கிடைக்கும். உங்கள் இனத்தவர் மத்தியில் பெரிய மனிதராக இருப்பீர்கள். புத்தி கூர்மையை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பீர்கள்.

தம்பதிகளிடம் நிலவிய ஈகோ தணியும். பிரிந்த தம்பதிகள் கூடி வாழும் சந்தர்ப்பம் உருவாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். மறு திருமண முயற்சி வெற்றி தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 21.3.2026 அன்று நள்ளிரவு 2.28 முதல் 23.3.2026 அன்று அதிகாலை 4.14 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். அனைத்தும் வெற்றி பெறும் நல்ல காலமாக இந்த வாரம் அமையும். சிவபுராணம் படிக்க காரிய வெற்றி உண்டாகும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com