வார ராசிபலன் 15.3.2026 முதல் 21.3.2026 வரை

Published on

கன்னி

நினைத்தது நடக்கும் வாரம். வார இறுதியில் ராசிக்கு ஆறில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தியாகிறார். வேலை தேடுபவர்களுக்கு நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். உங்களின் திறமையை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். எதிரிகள் விலகுவார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களில் இருந்த தடைகள் அகலும்.

கண் மறைவாக இருந்த, காணாமல் போன நகைகள் மீண்டும் கிடைக்கும். அடமான நகைகள் மீண்டு வரும். மாமனார் மூலம் திரளான சொத்துகள் அல்லது பணம் கிடைக்கும். புதிய கூட்டுத் தொழில் முயற்சி பலிதமாகும். பூர்வீக குலத்தொழிலில் புதிய பங்குதாரர் இணையலாம். பழைய பங்குதாரர் விலகலாம்.

ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்வில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். 21.3.2026 அன்று 2.28 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். அமாவாசை அன்று விஷ்ணு சஹஸ்கர நாமம் படிக்கவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com