ரிஷபம்: வார ராசிபலன் 22.3.2026 முதல் 28.3.2026 வரை

சிலர் புதிய தொழில் அல்லது வேலைக்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார்கள்.
ரிஷபம்: வார ராசிபலன் 22.3.2026 முதல் 28.3.2026 வரை
Published on

ரிஷபம்

நிதானமாக செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு சனியின் 3ம் பார்வையும் செவ்வாயின் நான்காம் பார்வையும் உள்ளது. ராசிக்கு செவ்வாய், சனி பார்வை இருப்பதால் வேலைப்பளு மிகுதியாகும். உழைத்த கூலி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மறைமுக எதிரிகள் உருவாகலாம். நம்பியவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். பங்கு வர்த்தகம் மற்றும் மறைமுக பணப் பரிமாற்றத்தில் கவனம் தேவை.

அண்டை அயலாருடன் சிறு சிறு மன வருத்தம் உண்டாகும். தேவையற்ற பேச்சையும், வாக்குக் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. சிலர் புதிய தொழில் அல்லது வேலைக்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார்கள். திருமண முயற்சி ஓரிரு வாரங்களுக்குப் பிறகு சாதகமாகும்.சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது சந்தர்ப்பம் அமையும், மகாலட்சுமி வழிபாடு மகத்தான முன்னேற்றம் தரும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com