விருச்சிகம்: வார ராசிபலன் 22.3.2026 முதல் 28.3.2026 வரை

பிள்ளைகளுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்: வார ராசிபலன் 22.3.2026 முதல் 28.3.2026 வரை
Published on

விருச்சிகம்

அதிர்ஷ்டமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டமாதிபதி புதன் மற்றும் ராகுவுடன் சுக ஸ்தானத்தில் உள்ளார். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆர்வம் கூடும். சிலருக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் அதிகரிக்கும். தொழில் வியாபரம் தொடர்பான சிறு அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து சுய தொழில் துவங்க வேண்டும். மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள்.

இன்னும் சரியாக இரண்டு மாத காலத்திற்கு ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் அவசியமான முக்கியமான பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. பிள்ளைகளுக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். 25.3.2026 அன்று காலை 6.17 முதல் 27.3.2026 அன்று காலை 9.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவசியமற்ற பெரிய பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். நிலைமையைப் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். சிவ வழிபாட்டால் நன்மைகள் கூடும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com